நாம் அனைவரும் சாலையில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். அதற்காகவே, இந்திய அரசு பல்வேறு போக்குவரத்து விதிகளை (Traffic Rules) உருவாக்கியுள்ளது. ஆனால், சில நேரங்களில் நாம் இவை பற்றி கவனிக்காமல் இருக்கலாம், சில நேரங்களில் எண்ணியோமா எண்ணாமலோ விதிகளை மீறிவிடலாம். இந்த விதிமீறல்களுக்கு அரசு கடுமையான அபராதங்கள் (Fines) விதிக்கிறது.
இங்கே ஒரு கேள்வி – இந்த அபராதத்தை செலுத்தாமல் விட்டால் என்ன ஆகும்? சிலர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காலதாமதம் செய்யலாம், சிலர் முற்றிலும் அலட்சியம் காட்டலாம். ஆனால், இந்திய போக்குவரத்து சட்டத்தின் படி, இதற்கு பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இருக்கும். இதைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நாம் சில முக்கிய சாலை விதிமீறல் அபராதங்களை பார்க்கலாம்.
இந்திய போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதங்கள்
இந்தியாவின் Motor Vehicles Act, 1988 மற்றும் 2019 திருத்தச்சட்டத்தின் படி, விதிகளை மீறுபவர்களுக்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. முக்கிய விதிமீறல்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான அபராத விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
🚗 வேகக்கட்டுப்பாட்டை மீறல் (Overspeeding)
சாலை போக்குவரத்து விதிகளின் படி, நீங்கள் உங்கள் வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டினால், அது பாதுகாப்புக்கு பெரிய அபாயம் மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயங்களும் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படும். பொதுவாக இருசக்கர வாகனங்களுக்கு 60kmph வேகமே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
✅ அபராதம்:
- மொத்தம் ₹1,000 முதல் ₹10,000 வரை
- வாகனம் ஓட்டும் அனுமதி (DL) ரத்து செய்யப்படலாம்
🏍️ தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல்
சாலை பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது மிக முக்கியமான விதி. பெரும்பாலான விபத்துக்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிந்தவர்களே.
✅ அபராதம்: ₹1,000
✅ மேலும் விளைவுகள்: மீண்டும் மீண்டும் செய்யும்போது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்
🚦 சிக்னல் நிக்காமல் செல்லுதல் (Jumping Signal)
சிக்னல்களை தவிர்த்துவிட்டு செல்லுதல் என்பது மிக பெரிய விபத்து அபாயம். இது விபத்திற்கு மிக முக்கியகாரணமாகும்
✅ அபராதம்: ₹1,000 முதல் ₹10,000 வரை
✅ மேலும் விளைவுகள்: சில நேரங்களில் ஓட்டுநர் உரிமம் (DL) ரத்து செய்யலாம்
📵 மொபைல் போன் பயன்படுத்தி ஓட்டுதல் (Using Mobile While Driving)
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துதல், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை அதிகரிக்கிறது.
✅ அபராதம்: ₹10,000 முதல்
✅ மேலும் விளைவுகள்: ஓட்டுநர் உரிமை ரத்து செய்யப்படலாம்
🚗 தவறான வழியில் ஓட்டுதல் (Wrong Side Driving)
வாகனத்தை ஒரு வழிச் சாலையில் தவறான வழியில் செலுத்துதல் என்பது மிகப்பெரிய விதிமீறல். இதுவே பெரிய விபத்திற்கு வழிவகுக்கும்
✅ அபராதம்: ₹10,000
✅ மேலும் விளைவுகள்: வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்
🍻 மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுதல் (Drunk Driving)
கிளினிக்கலாக நிரூபிக்கப்படும் அளவை விட அதிகமாக அல்கஹால் உடலில் இருந்தால், அது மோசமான விதிமீறலாக கருதப்படும். பொதுவாக போக்குவரத்து காவல்துறைக்கு அறிவுறுத்தப்படும் மிகவும் முக்கியமான விதியாகும்
✅ அபராதம்: ₹10,000
✅ மேலும் விளைவுகள்: சிறைத்தண்டனை 6 மாதங்கள் வரை
அபராதம் செலுத்தாமல் விட்டால் என்ன ஆகும்?
சிலர் போக்குவரத்து அபராதங்களை மறந்துவிடலாம், சிலர் செலுத்தாமல் இருப்பதற்காக வேண்டுமென்றே தவிர்க்கலாம். ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் – நீங்கள் ஒரு சாலை விதிமீறலுக்காக அபராதம் செலுத்த மறுத்தால், அதற்காக அரசாங்கம் உங்களிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளது.
1️⃣ அபராத தொகை அதிகரிக்கும்
சில நாட்கள் வரை நீங்கள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால், அது குறித்த காலக்கெடு முடிந்தவுடன் பெரிய தொகையாக மாற்றப்படும். சில வழக்குகளில், அபராதம் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு ஆகலாம். பொதுவாக அபராத தொகைகள் செலுத்த ATM அட்டைகள் மூலம் போக்குவரத்து காவலரிடமே செலுத்தலாம், இல்லையெனில் online இணையதளம் மூலம் (https://echallan.parivahan.gov.in/) செலுத்தலாம் இதற்க்கு காலக்கெடுக்கள் 15 நாட்கள் முதல் 30 வரை சாவகாசமாக நிர்ணயிக்கப்படுகிறது
2️⃣ நீதிமன்ற வழக்கு தொடரப்படும்
அபராதம் செலுத்த மறுத்தால், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் மீது Traffic Court அல்லது Lok Adalat வழக்கு தொடரலாம். ஒரு வழக்கில் நீதிமன்றம் உங்களிடம் அதிகபட்ச அபராதம் விதிக்கலாம் மேலும் சிறை தண்டனைகளும் விதிக்கநேரிடும்
3️⃣ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம்
இது மிகவும் மோசமான விளைவாகும். தொடர்ந்து விதிமீறல் செய்தால், ஓட்டுநர் உரிமத்தை (Driving License) தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக ரத்து செய்யலாம். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டநபர்கள் தடையை மீறி வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை விதிக்க நேரிடும்
4️⃣ வாகன சோதனையில் பிரச்சனை
போக்குவரத்து காவலர் உங்களை சோதனை செய்தால், உங்கள் வாகன பதிவு (RC) மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்படலாம், அப்போது அபராதம் செலுத்தப்படாமல் இருந்தால், வாகனத்தை பறிமுதல் செய்யலாம்.
5️⃣ வாகனக் காப்பீடு பிரச்சனை
அபராதங்களின் பதிவுகள் உங்கள் வாகனக் காப்பீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். புதிய காப்பீடு பெறும் போது, இதைச் செயல்படுத்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கலாம்.
6️⃣ பயண தடைகள்
சில மாநிலங்களில், அதிக அபராத பாக்கிகள் இருந்தால், பாஸ்போர்ட் விண்ணப்பம் அல்லது புதுப்பிப்பு பெறுவதில் தடை இருக்கலாம்.
தீர்வாக என்ன செய்யலாம்?
➡️ முடிந்தவரை விதிகளை பின்பற்றுங்கள் – விதிகளை மதிக்க வேண்டும், இது உங்கள் மற்றும் பிறர் பாதுகாப்புக்காக.
➡️ அபராதம் விதிக்கப்பட்டால், உடனே செலுத்துங்கள் – பின்னர் பெரிய பிரச்சனைகள் வராமல் இருக்க இது நல்ல முடிவு.
➡️ மொபைல் மூலம் செலுத்தலாம் – தற்போதைய காலகட்டத்தில் echallan.parivahan.gov.in மூலம் ஆன்லைனில் அபராதம் செலுத்தலாம்.
முடிவுரை
சாலை விதிமீறல் அபராதம் என்பது சாதாரண விஷயம் என்று நினைக்கக் கூடாது. விதிகளை மீறுவதே தவிர்க்க வேண்டிய ஒன்று. ஆனால், தவறுதலாக விதிமீறல் செய்திருந்தால், அபராதத்தை காலதாமதமின்றி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது பெரும் சட்டப்பூர்வ பிரச்சனையாக மாறலாம்.
🚦 பாதுகாப்பாக பயணிக்க விரும்பினால், விதிகளை மதிக்க வேண்டும்! 🚦